prithviraj thondaiman
prithviraj thondaiman

தங்கம் வெல்வதே லட்சியம்…ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரரின் தன்னம்பிக்கை!….

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 1896ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில்  தான் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. இது வரை முப்பத்தி ஓரு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

வருகிற ஜூலை மாதம் இருபத்தி ஆறாம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி வரை பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 200க்குமேற்பட்ட நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கற்க உள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தமிழ் நாட்டைச்சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தேர்வாகி இருக்கிறார். ஆடவர் பிரிவில் விளையாட இவர் தகுதி பெற்று இருப்பதாக தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் தெரிவித்துள்ளது. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள பிருத்திவிராஜ் தொண்டைமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறதர்.பதினைந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருவதாகவும். அதில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்காகவே தன்னை தயார்படுத்தி கொண்டு வந்ததாகவும் பிருத்விராஜ் சொல்லியிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்றும் பிருத்விராஜ் கூறியிருக்கிறார்,

தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடி தர வேண்டும் என்பதே தனது லட்சியம் என நம்பிக்கையோடு சொல்லியும் இருக்கிறார். நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பிருத்விராஜ் தொண்டைமான் நிச்சயமாக சாதிப்பார் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.