கண்டங்கள் தாண்டிய கொரொனா இப்போது, இந்தியாவில் நுழைந்ததால் இந்திய அரசு சிறந்த பாதுக்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்திய அளவில் மக்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசியத் தேவையை தவிர்த்து வெளியே செல்வதை தவிருங்கள்! என்று அரசு தரப்பு வலியுறுத்தி வருகின்றது. இதனால் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என தொடங்கி ஆட்டோக்கள் வரை அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சரக்கு ரயில்கள் குறித்த புதிய தகவல் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற, ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலைய பார்சல் அலுவலகங்களை அணுகலாம் என்றும் பார்சல்களை அனுப்ப இந்த எண்களை 8129316480, 9003061980, 9003061962, 944428223 அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.







