கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ளது கோடிகாலா என்ற கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி என்பவர். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். பிடித்த பாம்புகளை காட்டிற்குள் பாதுகாப்பாக விட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஒரு கிராமத்தில் 5 அடி நீளமுள்ள நாகம் ஒன்றை பிடித்த இவர் மது அருந்தி இருந்ததால் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கையிலேயே கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமான பாம்பு 5 முறை இவரை கொத்தியுள்ளது.
இதனால் அங்கேயே சுருண்டு விழுந்த இவர் மரணமடைந்தார்.













