தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படமான ‘சர்தார் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் இருந்த ரசிகர்களுக்குப் தற்போது உற்சாகமான தகவல் கிடைத்துள்ளது.
View this post on Instagram
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் (Amazon Prime) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள பிரத்யேக போஸ்டரில், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பை த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் வருகை ஓடிடி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













