---Advertisement---

ஜெயிலர் 2 ஓடிடி டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்: எந்த தளத்தில் ஸ்ட்ரீமிங்?

By Sri
Published on: October 19, 2026
Editorial visual featuring the OTT digital rights update for Jailer 2.
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் வசூல் சாதனை படைத்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் பல கோிகளைக் குவித்து வரும் இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகமும் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனையைப் படைத்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் டிஜிட்டல் உரிமையும் அதே தளத்தால் பெறப்படயுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மற்றும் ரித்விக் ஆகியோர் தங்களது முந்தைய கதாபாத்திரங்களில் தொடர்வதுடன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் புதிதாக இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இப்படம், தியேட்டர் ஓட்டம் நிறைவடைந்த பிறகு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தியேட்டர்களில் திருவிழாக்கோலமாகக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இந்த ஓடிடி அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the release of The Paradise.

‘தெ பரடைஸ்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 22-ல் வெளியாகும் பிரம்மாண்டப் படம்!

Editorial visual featuring the Netflix OTT streaming rights announcement for Don't Trouble The Trouble.

பகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ஓடிடி உரிமை நெட்ஃபிளிக்ஸ்வசம்: 5 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!

Editorial visual featuring legal drama themes for Enna Vilai.

ஒரு சிறிய தங்கப் பதக்கம் மொத்த குடும்பத்தின் வாழ்க்கையையும் மாற்றுமா? நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘என்ன விலை’!

Editorial visual featuring digital streaming themes for DC.

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம்: எப்போது முதல் பார்க்காலம்?

Digital streaming announcement graphic for Aasha.

ஊர்வசி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘ஆஷா’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த தளத்தில் எப்போது வெளியீடு?

Digital streaming announcement graphic for Karthik Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த தளத்தில் எப்போது வெளியீடு?