சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த பிரம்மாண்டத் திரைப்படமான ‘ஜெயிலர் 2’ (Jailer 2) படத்தின் ஓடிடி (OTT) வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், வரும் நவம்பர் 12 அன்று பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகவுள்ளது. இச்செய்தி உலகெங்கிலும் உள்ள தலைவர் ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது டிஜிட்டல் தளத்திலும் ‘ஜெயிலர் 2’ படத்தை “ரீபிட் மோடில்” கண்டு களிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டிஜிட்டல் வருகை ஓடிடி உலகிலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













