---Advertisement---

ரியாவுக்கு எதிரான வலுவான ஆதாரம்

Published on: September 30, 2020
---Advertisement---

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலரும் சந்தேகம் கிளப்பிய நிலையில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் சில போதை மருந்து கும்பலும் இந்த தற்கொலை வழக்கின் பின்னணியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சுஷாந்தின் காதலி ரியாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

தனக்கு ஜாமீன் வேண்டி சமீபத்தில் ரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் ரியாவுக்கு போதைபொருள் கடத்துபவர்களுடன் நல்ல தொடர்பு இருந்ததாகவும் அவர்கள்தான் சுஷாந்த்தை போதைமருந்து கும்பலுடன் சேர்த்து விட்டு அவர் தற்கொலை வரை காரணமாக இருந்தவர்கள் என வலுவான ஆதாரம் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரியாவோடு சேர்த்து அவரது சகோதரரும் விசாரணையில் உள்ளார். தண்டனை இருவருக்குமே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.