---Advertisement---

பழனி பஞ்சாமிர்தம் தரமா வழங்கப்படுது… வதந்திகளை பரப்பாதீங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!

By Sri
Published on: September 21, 2024
---Advertisement---

பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகின்றது. தேவையில்லாமல் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கின்றார்.

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனம் தான் பழனி கோயிலுக்கும் நெய்விநியோகம் செய்து வருவதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசி அவர் தெரிவித்திருந்ததாவது “கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டும்தான் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு முழுக்க முழுக்க ஆவின் நெய் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பழனியில் பஞ்சாமிர்தம் மிகத் தரமாக தயாராகின்றது. தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகின்றது. அந்த தனியார் நிறுவனம் தற்போது புகாருக்குள்ளான நிறுவனம் இல்லை. பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் எச்சரித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A legendary portrait of Isaignani Ilaiyaraaja celebrating 50 years in the Indian film music industry.

His Music Lives On Forever! — “அன்னக்கிளி உருவான கதை தெரியுமா?” — 50 ஆண்டுகால இசைப்பயணத்தில் இளையராஜா பகிர்ந்த ரகசியம்!

Official announcement poster of Blast movie featuring Arjun Sarja, confirming the May 28 release date and UA certificate.

Prepare For A Massive Explosion! — “அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு ‘UA’ சான்றிதழ்!” — மே 28-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

A viral compilation of 9 latest photographs shared by actress Nazriya Nazim on her Instagram in May 2026, showcasing her timeless beauty and upcoming film buzz.

Still Looks Like a Doll! — “12 வருஷம் ஆகியும் அப்படியே இருக்காரே!” — இன்ஸ்டாகிராமில் நஸ்ரியா பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்!

Throwback photos of actress Alya Manasa during her Japan educational tour in 11th standard.

Unseen Teenage Photos! — “ஜப்பானில் இந்தியா சார்பாக ஆல்யா மானசா!” — 11-ம் வகுப்பில் அவர் செய்த சாதனை தெரியுமா?

Official announcement of Komala Hari Pictures Production No. 4, a supernatural folk mystery produced by Komala Haribaskaran.

Supernatural Mystery Awaits! — “ஜென்டில்வுமன் படத்தைத் தொடர்ந்து அடுத்த அதிரடி!” — அமானுஷ்ய நாட்டார் கதையைத் தயாரிக்கும் கோமளா ஹரிபாஸ்கரன்!

Actor Vijay's JanaNayagan movie poster and the discussion about his Thalapathy title card vs Chief Minister title.

Humble Move! — “முதல்வர் இல்ல.. நான் என்றும் உங்கள் தளபதி!” — ‘ஜனநாயகம்’ படத்தில் புதிய டைட்டில் கார்டை மறுத்த விஜய்!