---Advertisement---

“நான் நாட்டாமை படத்தை ரிஜெக்ட் பண்ண காரணம் இதுதான்”: பரிதாபமாகத் தவறிய பிளாக்பஸ்டர் ஹிட் – மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!

By Sri
Published on: August 19, 2026
Actor Parthiban talking about his past movie rejections and future commercial projects.
---Advertisement---

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இயக்கத்தாலும், வித்தியாசமான கத களங்களாலும் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்த நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் (Parthiban), தற்போது தனது சினிமா பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தான் பரிசோதனை முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, முழுக்க முழுக்க வணிக ரீதியான (Commercial) திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஹவுஸ்ஃபுல் (Housefull) திரைப்படம் இன்று வெளியாகி இருந்தா நன்றாக ஓடியிருக்கும். இப்படத்தில் சியான் விக்ரம் இள வயது கதாபாத்திரத்திலும், நான் முதிய வயது கதாபாத்திரத்திலும் நடித்திருந்தோம். அந்தக் காலகட்டத்தில் எனக்கு இருந்த மக்கள் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இரண்டு கதாபாத்திரங்களிலும் நானே நடித்திருந்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும் என்று பலரும் என்னிடம் கூறினர். ஆனால், இரட்டை வேடக் கதாபாத்திரம் என்ப காரணத்தினாலேயே நான் ‘நாட்டாமை’ போன்ற பெரிய படங்களைக் கூட நிராகரித்துள்ளேன்” என்று அவர் வியப்புக்குரிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ‘உள்ளே வெளியே 2’ (Ulle Velliyae 2) மற்றும் ‘புதிய பாதை 2’ (Pudhiya Pathai 2) போன்ற கமர்சியல் இரண்டாம் பாகப் படங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்தப் புதிய முடிவு அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!