---Advertisement---

பாகிஸ்தானில் முகமது நபி பற்றி அவதூறு- மகளிர் பள்ளி முதல்வருக்கு தூக்கு உறுதி

Published on: September 29, 2021
---Advertisement---

பாகிஸ்தானில் முகமது நபிகள் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக, மகளிர் பள்ளி பெண் முதல்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிஸ்தார் காலனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் சல்மா தன்வீர். இவர், மாணவர்களுக்கு கல்வி கற்பித்த போது ‘முகமது நபிகள் இஸ்லாமின் கடைசி இறை தூதரல்ல,’ என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 2013ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது.  இவ்வழக்கின் விசாரணை, மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வந்தது.

அப்போது தன்வீரின் சார்பில் ஆஜரான வக்கீல் ‘எனது கட்சிக்காரர் ஒரு பெண் மட்டுமின்றி,  மனநோயாளியும் கூட. இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,’ என்றார். ஆனால், பஞ்சாப் மனநல சுகாதார நிறுவனம் ‘தன்வீரை பரிசோதித்து அளித்த அறிக்கையில், அவர் மனநோயாளி அல்ல விசாரணைக்கு தகுதியுடையவர் என தெரிவித்தது.  இதையடுத்து, தெய்வ நிந்தனை செய்ததற்காக தன்வீருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். ரூ.3000 அபராதம் விதித்தார். பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை சட்டம் மூலம் 1987ம் ஆண்டு முதல் 1,472 பேர் தண்டிக்கப்பட்டு உள்ளனராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? அதிரடி பேட்ஸ்மேனுக்கு தடை விதித்த வாரியம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!