---Advertisement---

அரசாங்க சொல்வதை கேளுங்க ஆயுள் நீடிக்கும் – ஆஸ்கார் நாயகனின் டிவிட்

By Sri
Published on: April 1, 2020
A.R.RAHMAN
---Advertisement---

உலக அளவில் பெரும் மரண பீதியை ஏற்படுத்தி உலக நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கவிட்டு தன் வேலையை சற்றும் குறைத்துக் கொள்ளாமல் அதே சுறுசுறுப்புடன் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா.

இதில் இருந்து தப்பிக்க அரசு தரப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் மக்களின் நலனுக்காக பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் அரசுக்கு நிதி உதவி அளித்தும் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியும் தங்களால் முடிந்த விழிப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டினை, நாட்டுக்கும், மக்களுக்கும் பங்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரின் டிவிட் மிகவும் நெகிழ்ச்சியாக அடைய செய்துள்ளது. அதன்படி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் “அனைவரின் மனதிலும் கடவுள் இருக்கிறார். எனவே, மத வழிபாட்டு தளங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசாங்கத்தின் அறிவுரையை கேட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், ஆயுள் நீடிக்கும். இந்த தொற்றை பரப்பி மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. இந்தக் கிருமி உங்களிடம் உள்ளது என்பது கூட உங்களுக்கு தெரியாது.” தயவு செய்து அரசாங்கம் சொல்வதை கேளுங்க, ஆயுள் நீடிக்கும் என்று ஒரு வேண்டுகோளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.