---Advertisement---

1.5 லட்சம் ரீல்ஸ்: சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்த ஜி.வி. பிரகாஷ்!

Published on: August 1, 2026
Composer GV Prakash sharing the 150K reels milestone success of Pattampoochi and Neno Butterfly songs.
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு தகவல் தற்போது ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. சூர்யா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் அவர் இசையில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ (Pattampoochi) மற்றும் ‘நேனோ பட்டர்ஃபிளை’ (Neno Butterfly) பாடல்கள் சமூக வலைதளங்களில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இப்பாடல்களை வைத்து உருவாக்கப்பட்ட ரீல்ஸ்களின் எண்ணிக்கை தற்போது பெரிய சாதனையாக 150K-ஐத் (1.5 லட்சம்) தாண்டி வைரலாகி வருகிறது.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜி.வி. பிரகாஷ், இந்த வெற்றியை நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர்களுக்குச் சமர்ப்பணம் செய்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். “Massive 150K reels a sensation on socials #pattampoochi and #nenobutterfly both a blockbuster hit song. Thank u all fans. This success is dedicated to all suriya sir fans” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. எங்கு பார்த்தாலும் இப்பாடலின் மேஜிக் தான் ஒலிக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் பாராட்டி வருகின்றன.

இப்பாடலின் தாளலயைம் மற்றும் ட்ரெண்டிங் பீட்ஸ் காரணமாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸில் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) மற்றும் சினிமா ரசிகர்கள் ஏராளமான ரீல்ஸ்களை உருவாக்கி பதிவேற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வரவேற்பு, இப்பாடலை இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடல்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஜி.வி. பிரகாஷுக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!