Latest News
நர்ஸை நண்பர்களுடன் சேர்த்து பலாத்காரம் செய்ய வந்த டாக்டர்… பெண் செய்த அதிரடி செயல்…!
மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியரை நண்பர்களுடன் சேர்த்து மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கொல்கத்தாவில் பெண் பெயர்ச்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அதே வேலையில் பீகாரில் உள்ள மருத்துவமனையில் நர்சை டாக்டர் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
பீகாரின் கங்காபூரில் உள்ள ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிபோதையில் அங்கு இருந்த நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கின்றார்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ் டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்புறுப்பை கையில் வைத்திருந்த பிளேடால் அறுத்து இருக்கின்றார். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய செவிலியர் அருகில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று மறைந்து கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நர்சரி மீட்டு சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் செவிலியரை பலாத்காரம் செய்ய முடிவெடுத்த மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் அனைத்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் பிளேடு ரத்தம் துடைத்த துணிகள் மூன்று கைபேசிகள் மது பாட்டில் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.