---Advertisement---

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Published on: September 21, 2026
File photos of veteran actresses Radha and Ambika.
---Advertisement---

தமிழ் சினிமா உலகில் 1980-களில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா (Actress Ambika and Radha) சகோதரிகள் இடையே திடீரென பெரும் மோதல் வெடித்துள்ளது. தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக இணைபிரியாத சகோதரிகளாக வலம் வந்த இவர்களுக்கு இடையே எழுந்துள்ள இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராதா, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தனது சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னிடம் இருந்த கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளைத் தமக்குத் தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் மோசடி செய்ய முயற்சித்துள்ளதாக அவர் அக்கு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பழைய காசோலைகளை முறைகேடாகப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தி (SMS Alert) மூலம் இந்த மோசடி முயற்சி தன் கவனத்திற்கு வந்ததாகவும், உடனே தான் அந்தப் பரிவர்த்தனைக்குத் தடை (Stop Payment) விதித்ததாகவும் ராதா குறிப்பிட்டுள்ளார். குடும்ப சொத்து மற்றும் ஸ்டுடியோ தொடர்பான பிரச்சினைகள் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இப்புகார் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring dramatic film industry themes for Karathey Babu.

சென்சார் மற்றும் வணிக ரீதியிலான சிக்கல்களில் சிக்கிய ரவி மோகனின் ‘கராத்தே பாபு’: வெளியீட்டில் தொடரும் தாமதம்!

Editorial visual featuring advance booking hype for Jailer 2.

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Editorial visual featuring box office milestone themes for Mandaadi.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் திரையரங்குகளில் சாதனை படைக்கும் சூரியின் ‘மண்டாடி’: 30-வது நாளை எட்டிய திரையரங்க ஓட்டம்!

Editorial visual featuring film director and actor collaboration themes.

‘கான் சிட்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்க்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்: கோலிவுட்டில் புதிய கூட்டணி!

ditorial visual featuring theatrical release themes for Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு: டிசம்பர் 4-ல் திரைக்கு வரும் சோசியல் பொலிட்டிகல் டிராமா!

Editorial visual featuring cinema debut themes.

இயக்குநரைத் தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்? இயக்கவிருக்கும் பிரபல உறவினர் யார் தெரியுமா?