தென்னிந்தியத் திரையுலகில் தற்போது எந்தத் பக்கம் திரும்பினாலும் நடிகர்களின் சம்பள உயர்வு குறித்த விவாதங்கள் தான் ஹாட் டாப்பிக்காக மாறிவருகின்றன. அந்த வகையில், மலையாளத் திரையுலகில் சாதாரண பட்ஜெட் படங்களில் நடித்து வந்த பிரபலமான நடிகர் ஒருவர், டோலிவுட்டில் இருந்து வந்த பெரிய வாய்ப்புக்காகத் தனது வழக்கமான சம்பளத்தைப் போல மூன்று மடங்கு தொகையைக் கேட்டதாக வெளியாகி உள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளப் படங்களில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறாத அந்த நடிகர், இதற்கு முன்பும் சில நேரடித் தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பான்-இந்தியா அளவில் வெளியான அந்தப் படங்களின் வெற்றியும், தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான வணிகச் சூழலும் தான் இவரது இந்த திடீர் சம்பள உயர்வுக்கான முக்கியக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
மறுபுறம், மலையாள சினிமாத் துறைக்கும் தெலுங்கு திரைப்படத் துறையின் பிரம்மாண்ட பட்ஜெட்டுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வர்த்தக நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் மற்ற மொழிகளில் கால்பதிக்கும் போது தங்களது மார்க்கெட் மதிப்பைத் தாண்டி மிகப்பெரிய தொகையைக் கோருவது வழக்கமாகிவிட்ட போதிலும், இந்தச் சம்பள விவகாரம் தற்போது கிசுகிசு வடிவில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.













