---Advertisement---

கீழடி அகலாய்வில் அதிசய வெள்ளி நாணயம்

Published on: July 28, 2021
---Advertisement---

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் கீழடியில் 7, அகரத்தில் 8, கொந்தகையில் 5, மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள், உறைகிணறுகள், மூன்று கல் வரிசை கொண்ட சுடுமண் செங்கல்சுவர், மூடியுடன் கூடிய பானைகள், பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், உணவு குவளை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் போது கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பொருள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் இரு புறமும் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன

இந்நிலையில் இது குறித்து அகழ்வாய்வாளர்கள் கூறுகையில், ‘‘கீழடியில் கண்டறியப்பட்ட நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது முத்திரை நாணயம் போன்று பயன்பட்டிருக்க வேண்டும்.

இது கிமு 2 முதல் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எனினும் நாணயத்தின் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த நாணயம் தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Warner Bros India announcing The End of Oak Street movie release in IMAX and theaters for August 2026 in English, Tamil, Telugu, and Hindi.

திரையரங்குகளை அதிரவைக்க வரும் வார்னர் பிரதர்ஸின் மெகா படம்… தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த அசாத்திய சர்ப்ரைஸ்!

Actress Janhvi Kapoor sharing her appreciation for Tollywood work culture and discipline on movie sets.

மதிய உணவு இடைவேளையில் குட்டித் தூக்கம்… தெலுங்கு படப்பிடிப்பு தளங்களின் ரகசியத்தை உடைத்த ஜான்வி கபூர்!

Actress Priyanka Mohan receiving the Honorary Ambassador award from the President of Korea Tourism Organization after Made in Korea movie success.

கொரியாவில் படம் எடுத்ததால் கிடைத்த மெகா கௌரவம்… சர்வதேச தூதராக மாறிய நடிகை பிரியங்கா மோகன்!

Actress Trisha Krishnan sharing her smiling magical may memory clicks on Instagram amid marriage rumors with CM Vijay in political circles.

த்ரிஷாவின் இன்ஸ்டா ‘மேஜிக்கல் மே’ போஸ்ட்; முதல்வர் விஜய் திருமண வதந்திகளுக்கு நடுவே இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Actress Urvashi talking about legendary Tamil cinema comedian Kumari Muthu and his inspirational life lesson lines.

“அனைவரும் கிண்டல் செய்த அதே கண்கள் தான்…” லெஜண்ட் குமாரி முத்து சொன்ன வார்த்தை… சமீபத்திய பேட்டியில் உருகிய ஊர்வசி!