கொரொனா பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில், கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் சுமார் 1,937 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைடுத்து, இந்திய அரசாங்கம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கையாண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திலும் பல பேர் வீட்டிலும், சிலர் மருத்துவமனையிலும் குவாரண்டைனில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் பலபேரை குவாரண்டைன் மையத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த மையத்தில் அவர்களுக்காக வைக்கப்படும் குடிநீருக்கும், உணவுக்கும், ஒருவரையொருவர் முந்தி அடித்துக்கொள்ளும் காட்சியை பார்க்கும் பொழுது பசி கொடுமைக்கு முன்னால் சோஷல் டிஸ்டன்ஸிங்க தோத்து போச்சு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த வீடியோ பதிவை பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பசிக்கு முன்னாடி சோஷல் டிஸ்டன்ஸிங்க தோத்து போச்சு!
பயத்துக்கு முன்னாடி மனிதாபிமானம் சத்திபோச்சி!!This is a #Covid_19india quarantine centre in Agra , UP . These visuals depict a scramble for essential supplies from behind the locked gates . Social distancing , and even basic human dignity seem to be out of the picture here …. agra has the maximum Covid + cases in UP … pic.twitter.com/O1FxdQn6tS
— Alok Pandey (@alok_pandey) April 26, 2020







