---Advertisement---

மனைவியை மாட்டிவிட கணவன் போட்ட மாஸ்டர் பிளான்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… இப்படி மாட்டிக்கிட்டீங்களே…!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

மனைவியை மாட்டி விடுவதற்காக அவரது காரில் கஞ்சா செடியை வளர்த்த கணவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் 37 வயதான டான் சியான்லாங்கிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். தற்போது வரை அவர்கள் விவாகரத்து பெறவில்லை. ஏனென்றால் சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து பெற முடியும்.

ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவர் மேல் குற்ற வழக்கு பதிவாகி இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெற முடியும். இதனால் ஒரு திட்டம் தீட்டியிருக்கின்றார் கணவர். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி அவரின் மனைவிக்கு தெரியாமலேயே அவரது காரின் பின்புறம் நட்டு வைத்திருக்கின்றார்.

இதில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்து இருக்கின்றது. பின்னர் போலீசார் அவரது காரை சோதனை செய்து போதைப் பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். ஆனால் விசாரணையில் அவர் கஞ்சா வளர்ப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்தபோது அவரது கணவர் கஞ்சா செடிகள் நட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்ட கணவன் செய்த செயல் அவருக்கு ஆப்பாக அமைந்துவிட்டது. தற்போது நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் போதை பொருட்கள் பயன்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!