---Advertisement---

சீரியல்களை ஒதிக்கி சினிமாக்களை களமிறக்கின்றதா தொலைக்காட்சி சேனல்கள்! அப்போ மக்களுக்கு ஒரே குஷிதான் போங்க!!

By Sri
Published on: April 15, 2020
cinemas in TV channels
---Advertisement---

இந்தியாவில் கொரொனா பீதியால், 144 தடை நேற்றைய தினம் ஆன ஏப்ரல் 14 வரை வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சீரியல்கள் தொலைக்காட்சியில் ஓளிப்பரப்பு நிறுத்தப்பட்டு இருப்பது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்த நிலையில், தொலைக்காட்சிகள் பல போட்டி போட்டுக்கொண்டு பழைய சீரியல்களை மறு ஓளிப்பதிவு செய்து வருகின்றனர். இதுவும் பத்தாதென்று தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்னும் ஸ்பெஷலாக மக்களை குஷிப்படுத்தும் நோக்கில் ஒரு உத்தியை கையாண்டு உள்ளது.

இதன்படி, தொலைக்காட்சிகளில் பழைய சீரியல்களை அடுத்து மக்களுக்கு பிடித்த, மிகவும் ஹிட்டடித்த, பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வரை அனைத்தும் ஒளிபரப்பாகின்றது. பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல பல சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப தயார்ப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தொலைக்காட்சி சினிமாவில் எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை பல்வேறு காலகட்ட சினிமாக்களை ஒளிபரப்புகின்றது.

தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!

cinema spls in tvchannels
cinema spls in tvchannels

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.