---Advertisement---

கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

By Sri
Published on: March 26, 2020
---Advertisement---

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மூலம் வைரஸ் தொற்று மேலும் பரவலாம் என்ற அச்சத்தில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியும் சிலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அரசு மருத்துவப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கும் என அறிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!