---Advertisement---

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவேண்டுமா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி !

By Sri
Published on: March 24, 2020
---Advertisement---

தமிழகத்தில் இன்று மட்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது குறுத்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு குவிந்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகியுள்ளது. இது மக்களை மேலும் அச்சத்தில அழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தங்கள் வாகனங்களிலும் மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்க பட்ட பொதுநல வழக்கில் நீதிபதிகள் ‘இன்று ஒருநாள் சுங்கச்சாவடிகளில் மக்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்வது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.