---Advertisement---

ரெடியா இருந்துக்குங்க…அடுத்த ரெண்டு நாளைக்கு மழை இருக்குதாம்!…

Published on: July 3, 2024
Rain
---Advertisement---

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் திடீர், திடீரென மழை பெய்து வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்ட இடங்களிலெல்லாம் பெய்து வந்த இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மழை பொழிவு தொடருமா? என்கின்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது இதனையடுத்து.

மேற்கு திசை காற்றே பருவ நிலையில் இந்த மாற்றங்களுக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலே இப்போது பெய்த மழையின் அளவு அதிகமாக இருந்தது. மாவட்டங்களின் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

RainFall
RainFall

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான தட்ப வெப்ப சூழ்நிலை குறித்தும் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் சொல்லியுள்ளது. இதன்படி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமானது முதல் லேசான மழை பெய்ய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளது.

ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வத்ற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்குத் திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாடு, புதுசேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் பெய்யும் என எதிர்பார்க்கபபடும் மழை நாளை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவதை தவிர்க்க சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Ketika Sharma smiling and expressing gratitude to Tamil cinema fans.

KETIKA SHARMA on Tamil Fans : “மொழி பாகுபாடு பார்ப்பதில்லை!” – தமிழ் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய கெட்டிகா சர்மா!

Official release date poster of Jr NTR and Prashanth Neel's movie NTRNeel scheduled for June 11, 2027.

NTRNeel : “ஜூன் 11, 2027-ல் என்டிஆர் ராஜ்யம் ஆரம்பம்” – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே 20-ல் வெளியாகிறது மாஸ் ப்ரோமோ!

Actor Siddharth and Actress Trisha together in a promotional still for their 4th collaboration.

SIDDHARTH – TRISHA Reunion : 10 வருஷம் ஆச்சு! – மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் – திரிஷா! எத்தனாவது படம் தெரியுமா?

Actor Ajith Kumar holding the Indian flag on the podium at Circuit de Spa-Francorchamps, Belgium.

Racing Star AJITH : பெல்ஜியத்தில் பறந்த இந்தியக் கொடி! – ரேசிங்கில் 2-வது இடம் பிடித்து அஜித் குமார் அணி சாதனை!

Actress Rukmini Vasanth posing in a stylish outfit for a high-fashion aesthetic photoshoot.

RUKMINI VASANTH Gallery : கண்களைக் கவரும் ருக்மிணி வசந்த்! – வைரலாகும் 5 புதிய புகைப்படங்கள்!

Actor-Director Dhanush and Actress Mrunal Thakur in a professional discussion during a recent photoshoot.

DHANUSH Directs Mrunal : தனுஷ் இயக்கத்தில் மிருணால் தாக்கூர்! – பெண் தெய்வமாக நடிக்கும் சீதா ராமம் நாயகி!