---Advertisement---

குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டே… திருட்டு முழி முழித்த பெண்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

By Sri
Published on: September 3, 2024
---Advertisement---

பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் புதைத்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பள்ளிப்புரம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஆஷா இவருக்கு வயது 35 இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும் ஆஷா மீண்டும் கர்ப்பமாகி இருக்கின்றார். ஆனால் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் யாரிடமும் கூறாமல் இருந்து வந்திருக்கின்றார்.

வயது பெரியதாக இருப்பதை பார்த்து கேட்பவர்களிடம் தனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும், இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கின்றார். இதையடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடைபெற்றது. சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்தது. அந்த மருத்துவமனையில் இருந்து 31ஆம் தேதி ஆஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை அறிந்த சுகாதாரத் துறை பணியாளர்கள் அவரின் வீட்டிற்கு சென்று குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்திருக்கின்றார். இருப்பினும் அவர் மீது சுகாதாரத்துறை ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர்.

புகாரின் பெயரில் ஆஷாவிடம் விசாரணை நடத்திய போது தனக்கு பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்துக் கொன்று கழிவறையில் புதைத்த தகவலை தெரிவித்து இருக்கின்றார். இதற்கு அவரின் ஆண் நண்பர் ரதீஷ் என்பவர் உதவியாக இருந்திருக்கின்றார். அவரின் வீட்டின் கழிவறையில் தான் அந்த குழந்தையை ஆஷா புதைத்து வைத்திருக்கின்றார்.

இதையடுத்து ஆஷா மற்றும் அவரின் ஆண் நண்பரை கைது செய்து கழிவறையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குழந்தையை கொன்று புதைத்ததற்கான காரணம் குறித்து ஆஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பெற்ற தாயை குழந்தையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!