---Advertisement---

ஆர்யா ராஜேந்திரனுக்கு கமல் வாழ்த்து

Published on: December 28, 2020
---Advertisement---

சமீபத்தில் நடந்து முடிந்த கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்புகள் பலவற்றில் தலைவராக செயல்பட்டு தற்போது கவுன்சிலர் ஆகியிருக்கும் 20 வயதே ஆன இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வளவு இளம் வயதில் யாரும் மேயர் ஆனது இல்லை.

இந்த சாதனைக்கு நடிகரும் மக்கள் நீதிமய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் “மாதர் படை” மாற்றத்திற்குத் தயாராகி விட்டது என கமல் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.