தமிழகத்தில் ஊரடங்கால் அத்தியாவாசிய கடைகளை தவிர்த்து, அனைத்து கடைகளும் முடப்பட்டுயிருந்த நிலையில், டாஸ்மாக் திறக்க கோரி மது பிரியர்கள் பல்வேறு காரணங்களை முன்னிருத்தி தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தமிழக அரசும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, டாஸ்மாக்கை திறக்க அனுமதி பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த சனிக்கிழமை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் முறையில் செயல்ப்பட்டு வருகின்றது. மதுபான விற்பனையை மேலும் அதிகரிக்க நேற்று டாஸ்மாக் நிர்வாகம் இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என்ற புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மதுரையில் – ரூ.28.6 கோடி, திருச்சியில் – ரூ.26.4 கோடி, சேலத்தில் – ரூ.24.3 கோடி, கோவையில் – ரூ.22.5 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடிக்கு மது விற்பனை என தகவல்கள் கசந்தியுள்ளது.







