---Advertisement---

தூத்துக்குடியில் சைக்கோ வாலிபரின் செயலால் அப்பாவி தீயில் எரிந்து பலி

Published on: October 13, 2020
---Advertisement---

தூத்துக்குடியில் தெற்கு காட்டன் பகுதியில் நடராஜன் காம்பவுண்ட் என்ற தனிநபருக்கு சொந்தமான காம்பவுண்ட் உள்ளது. இதில் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் ஒன்றில் குடியிருந்த தினேஷ் என்பவருக்கும் அருகருகே வீட்டில் இருந்த பலருக்கும் திடீர் பகை ஏற்பட்டுள்ளது. எல்லோரிடமும் பகைமையை வளர்த்துக்கொண்டுள்ளார்.

அனைவரும் சேர்ந்து வலியுறுத்தியதால் கடந்த வாரம் வீட்டையும் காலி செய்து சென்றார் தினேஷ். தீவிர ஆத்திரத்தில் இருந்த இவர் நேற்று இரவு பெட்ரோல் ஊற்றி காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தார். மளமளவென தீ பரவியதால் ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணாமலை என்பவர் அந்த தீயில் சிக்கி பலியானார். ஒரு சிறுவனுக்கு காயமும் ஏற்பட்டுள்ளதால் அந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.