---Advertisement---

மே31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று சந்திப்பு!

By Sri
Published on: May 26, 2020
Tamilandu Chief Minister
---Advertisement---

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை..

தமிழகத்தில் நான்கு கட்டமாக ஊரடங்கு அமலில்யிருக்கும் நிலையில், மே31-ம் தேதியுடம் 4ம் கட்ட ஊரடங்கு முடிவுடைய உள்ளதால், இன்று காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவை சந்திக்க உள்ளார், தமிழக முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில், கொரொனா தொடர்பான நிலவரங்களை குறித்து ஆலோசித்த பிறகு, ஊரடங்கு மே31க்கு பிறகும் நீட்டிக்கலாமா? முதலிய முக்கிய முடிவுகளை குறித்தும் விவாதிக்க உள்ளார்.

மேலும், தமிழகத்தில் கொரொனா பரவாமல் தடுக்க மருத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் இன்னும் சில தளர்வுகளை அறிவிக்கலாமா? போன்ற பிரதான கேள்விகளுக்கு மருத்துவ குழுவுடனான ஆலோசனைக்கு பிறகு தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.