---Advertisement---

வாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார் ! இளைஞரின் செயலால் அதிர்ச்சி!

By Sri
Published on: April 30, 2020
---Advertisement---

தேனியில் போலிஸார் வாகன சோதனை செய்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய இருந்த நிலையில் இளைஞர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பேரிகார்டில் தலையை மோதிக்கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள பொம்மைய கவுண்டன்பட்டியில் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையில் போலிஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞரை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். போலிஸார் அப்போது உணர்ச்சிவசப்பட்ட அந்த இளைஞர் அங்கிருந்த வாகனங்களை தள்ளிவிட்டுள்ளார். மேலும் அருகில் இருந்த பேரிகார்டில் தலையை மோதிக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரது செயலை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் விசாரணையில் அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இதுபோல சோதனையில் பைக் பறிமுதல் செய்யப்பட்டவர் என்றும், இப்பொது தந்தையை ஹோட்டலில் தனது தந்தையை இறக்கி விட்டு வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் போலீஸார் பைக்கை பறிமுதல் செய்ய முயன்றதால் மன உளைச்சலில் இவ்வாறு செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.