கொரொனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த நாடுகளுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து நாடுகளிலுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை அமுல்படுத்தியுள்ளது.
கொரொனா நோய் தொற்றால், உலக பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்ட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கொரொனா தாக்கத்தினால், காய்கறிகள் மருந்தகங்கள் என குறிப்பிட்ட கடைகள் மட்டுமே மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளது, அதுவும் தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட நடைமுறையை கடைகள் பின்பற்றுகின்றனர். ஆனால் நகைக்கடைகள் அனைத்தும் இந்திய அளவில் மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யும் சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் ஊரடங்கு பின்பற்றி வருவதால் மக்கள் யாரும் தங்கநகைகள் வாங்காவிட்டாலும் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இன்றைய தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால், அடுத்த மாதம் மிக பெரிய உச்சத்தை தொடும் என்று கூறப்படுகின்றது. ஆதாவது, அடுத்த மாதம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தகவல்கள் கசிந்துள்ளன. இது உண்மையானால், ஆய்யோ அம்மா! ஊரடங்கு உத்தரவால் தங்கம் வாங்காதது ஒரு கூத்தமா? என்று தான் மக்களுக்கு புலம்ப தோன்றும்.







