சீனாவில் தொடங்கி உலகளவில் வேகமாக தன் வேட்டையை தொடங்கியுள்ளது கொரோனா. இந்தியாவை பொருத்தவரை மாநில அரசும், மத்திய அரசும் போர்கால நடவடிக்கைகளையும் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் 10th , 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி பொது தேர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது, தமிழக அரசு 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பை வெளியிட்டது. தமிழக அரசை தொடர்ந்து சிபிஎஸ்சி மனித மேம்பாட்டு அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி சிபிஎஸ்சியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் என்று சிபிஎஸ்சி மனித மேம்பாட்டு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.







