---Advertisement---

கொரோனா நிவாரணம்… குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு !

By Sri
Published on: March 24, 2020
---Advertisement---

கொரொனாவை முன்னிட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணத்தொகயை அறிவித்துள்ளார். அதன்படி ‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு பொருட்கள் விலை இன்றி வழங்கப்படும். மேலும் கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்.’ என அறிவித்துள்ளார்.

இந்த நிவாரணத்தொகையை வாங்க மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க, டோக்கன் வழங்கி அதன்படி மக்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.