---Advertisement---

10 ஆண்டுகளாக பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடுமை… சாகும் வரை சிறை… நீதிமன்றம் அதிரடி…!

By Sri
Published on: September 5, 2024
---Advertisement---

10 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினத்தன்று தேர்வு நடந்து போது அவரின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதை பார்த்த பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை தனியாக அறைக்கு அழைத்து சென்று பேசியிருக்கின்றார்.

அப்போது கூலித்தொழியாளியான தனது தந்தையால் தனக்கு பாலியல் தொல்லை இருப்பதாக தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் கொடுத்தார்கள். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர் அந்த மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது அவளின் தாய் இறந்துவிட்டார். மாணவியின் தந்தை வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் தான் இந்த மாணவி தங்கி இருக்கின்றார். மாணவிக்கு ஐந்து வயதான நிலையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கின்றார்.

அப்போதிலிருந்து மாணவிக்கு அவரின் தந்தை பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கின்றார் . கடந்த 10 ஆண்டுகளாக மாணவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து இருந்தது தெரியவந்தது. தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி கூறியதன் பெயரில் அவளது தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .

பின்னர் திருவனந்தபுரம் போஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 26 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டது. அதில் மகளின் பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஷிபு உத்தரவிட்டிருக்கின்றார். மேலும் அவருக்கு 1. 60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?