---Advertisement---

தளபதி விஜய்யும், ஊர்வசியும் தான் முதல் சாய்ஸா? ‘எம்.குமரன் சடன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் சுவாரஸ்யத் தகவல்!

By Sri
Published on: October 9, 2026
Editorial visual featuring nostalgic cinema themes.
---Advertisement---

தமிழ் திரையுலகில் கடந்த காலங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் எம்.ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த கல்ட் கிளாசிக் திரைப்படமான ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ (M. Kumaran S/O Mahalakshmi) குறித்த ஒரு புதிய மற்றும் வியக்க வைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி’ படத்தின் ரீமேக்காக உருவான இப்படத்தில், தாய் – மகன் இடையேயான பாசப் போராட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தில் ஜெயம் ரவியும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்த நதியாவும் தாயாக நடித்து மிகப்பெரிய பாராட்டைப் பெற்றனர். ஆனால், இப்படத்தின் ஆரம்பக்கட்டக் கதைக் களமும் திட்டமிடலும் வேறு சில பிரபலங்களைக் கொண்டே தொடங்கப்பட்டதாகத் பிரபல மலையாள நடிகை ஊர்வசி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

மலையாளப் படமான ‘அச்சுவின் அம்மா’ படத்தில் மீரா ஜாஸ்மின் மற்றும் ஊர்வசி இடையேயான பிணைப்பைப் போன்று, இப்படத்தின் கதையை முதலில் தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் நடிகை ஊர்வசி (Urvashi) ஆகியோரை வைத்து இயக்கவே இயக்குநர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் தான் புதிதாகத் திருமணம் முடித்திருந்ததாலும், அப்போது தனது மகள்கூடப் பிறக்காத நிலையில் ஒரு பெரிய நடிகருக்கு அம்மாவாக நடிப்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ளத் தயங்கியதாலும் ஊர்வசி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதனைத் தொடர்ந்துதான் இந்த வாய்ப்பு நதியா மற்றும் ஜெயம் ரவி கைக்குச் சென்று, தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படம் ஒரு மைல்கல்லாக மாறியது. ஒருவேளை இந்தப் கூட்டணி இணைந்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை சினிமா வட்டாரத்தில் தற்போது இந்தத் தகவல் விவாதிக்க வைத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring advance booking hype for Jailer 2.

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Editorial visual featuring box office milestone themes for Mandaadi.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் திரையரங்குகளில் சாதனை படைக்கும் சூரியின் ‘மண்டாடி’: 30-வது நாளை எட்டிய திரையரங்க ஓட்டம்!

Editorial visual featuring film director and actor collaboration themes.

‘கான் சிட்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்க்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்: கோலிவுட்டில் புதிய கூட்டணி!

ditorial visual featuring theatrical release themes for Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு: டிசம்பர் 4-ல் திரைக்கு வரும் சோசியல் பொலிட்டிகல் டிராமா!

Editorial visual featuring cinema debut themes.

இயக்குநரைத் தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்? இயக்கவிருக்கும் பிரபல உறவினர் யார் தெரியுமா?

Editorial visual featuring cinematic themes for Vettuvam.

பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா துல்கர் சல்மான்? கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவும் தகவல்!