---Advertisement---

காபியில் விஷம்… கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் கணவர் வீட்டார் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!

By Sri
Published on: September 1, 2024
---Advertisement---

கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இளம் பெண்ணுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கணவர் வீட்டார் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியில் சேர்ந்தவர் ஜவஹர்லால். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவருக்கு இம்ரான் மற்றும் முக்தார் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இம்ரான் ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது நிலாபர் நிஷா ஆகிய தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி ஆஷிகா பர்வீன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து ஊட்டி மேற்கு போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. அந்த அறிக்கை தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் காபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாக இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து போலீசார் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வினை அவரது பெற்றோரிடம் இருந்து 20 லட்சம் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி இருக்கின்றார்.

இதை அவரது பெற்றோரால் கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு அவர் கொலை செய்ய முடிவு செய்து இருக்கின்றார். ஊட்டியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைக்கு பாலிஷ் போட பயன்படுத்தப்படும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து ஆஷிகா பர்பினை கொலை செய்துள்ளனர். இதையடுத்து இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.