திருவள்ளுர் மாவட்டம் ஆங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் மதனகோபால் என்பவர். இவர் தன்னை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் என்று அரசு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவரிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை நம்பிய கமலக்கண்ணன் தனது இரு மகள்களுக்கு வேலை வாங்க 45 லட்சம் பணம் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய மதனகோபால் வேலையும் வாங்கி தராமல் போலியான அரசாணை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.
அரசாணை போலி என தெரிந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து மதனகோபால் கைது செய்யப்பட்டார்.













