சென்னை மதுரவாயல் ஜெ ஜெ நகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகையை இன்று திடீரென சிலர் தாக்கினர். உள்ளே நுழைந்து சமையலுக்கு வைத்துள்ள காய்கனிகள் எல்லாவற்றையும் தூக்கி போட்டு உதைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. உடனடியாக இதை பார்த்த ஸ்டாலின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அடிப்படை கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் உடைந்த பகுதிகளை சரி செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்… pic.twitter.com/8FjmbSzTgS
— Ma Subramanian – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) May 4, 2021













