---Advertisement---

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

By Sri
Published on: April 29, 2026
Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.
---Advertisement---

‘கே.ஜி.எஃப்’ (KGF) படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் யாஷின் ‘டாக்ஸிக்’ (#Toxic). கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகர் யாஷ் ஒரு முக்கியமான அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். அதில், “ஜூன் 4-ஆம் தேதி ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது. படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash (@thenameisyash)

தாமதத்திற்கு என்ன காரணம்? படத்தின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமான முறையில் பெங்களூரு மற்றும் லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. உயர்தரமான கிராபிக்ஸ் (VFX) பணிகளுக்கு கூடுதல் காலம் தேவைப்படுவதாலும், ரசிகர்களுக்கு ஒரு தரமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகி நீண்ட இடைவெளி ஆகிவிட்டதால், யாஷை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருந்தனர். தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது அவர்களுக்குச் சிறு ஏமாற்றத்தைத் தந்தாலும், ஒரு “பக்கா” கமர்ஷியல் ஆக்சன் விருந்தை யாஷ் தயார் செய்து வருகிறார் என்பதால் இந்த அறிவிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Lead cast of Toxic movie featuring Rockstar Yash, Nayanthara, and Rukmini Vasanth.
டாக்ஸிக் படத்தில் இணையும் நட்சத்திரப் பட்டாளம்: யாஷ், நயன்தாரா மற்றும் ருக்மிணி வசந்த்!

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ளதாகத் தெரிகிறது. புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.