திருமலை திருப்பதி கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகவும் இந்திய அளவில் தினசரி பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய கோவிலாகவும் இது உள்ளது. நவக்கிரகங்களில் இது சந்திர பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.
இக்கோவிலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மரசம்பங்கி மலர் கோவில் கைங்கர்யங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்குள்ள 30 அடி பிரகாரம் சம்பங்கி பிரகாரம் என அழைக்கப்படுகிறது.
இப்படி பல சிறப்புகளை பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள சம்பங்கி மரத்தை கோவில் ஸ்தல விருட்சமாக நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.













