---Advertisement---

வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!

By Sri
Published on: August 2, 2024
---Advertisement---

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது.

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு வேலையில் பலரும் உதவி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர்.

வீடுகள் இடிந்து விழுந்து மரங்கள் வேரோடு சாய்ந்து. இன்னும் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமல் இருக்கின்றது. நான்காவது நாளாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஐ கடந்து சென்று கொண்டிருக்கின்றது. மேலும் நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும்போது சேறு, சகதியில் யார் சிக்கி இருந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியும், இதனால் மண்ணில் புதைந்தவர்களை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்றும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க