---Advertisement---

பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது ஒரு வாரம் திருவிழா போல திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டிஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான் பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமணத்தில் பாடல் ஒழிக்கப்பட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தான் மேடைக்கு வரும்போது குறிப்பிடப் பாடலை இசை அமைக்க வேண்டும் என்று மணப்பெண் விரும்பி கேட்டு இருக்கின்றார். ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் தரப்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை தான் நாங்கள் ஒளிபரப்புவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

இதனால் இரு வீட்டருக்கும் இடையே வாக்குவாதம் இருந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இருதரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டு சார்பில் திருமணத்திற்கு வந்த விருந்தினர் ஒருவர் மீண்டும் பெண் வீட்டாருடன் சண்டைக்கு சென்று இருக்கின்றார்.

பெண் வீட்டு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும் போது வழிமறித்து அவரை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். அவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?