---Advertisement---

குறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!

By Sri
Published on: April 20, 2020
worldwide corona
---Advertisement---

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக உயர்வு, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302லிருந்து 2,547ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 13 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் தெலங்கானாவில் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார். கொரியர் சேவைகளையும், உணவு சேவைகளயும் முற்றிலுமாக தடை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் இதுவரி 800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.