Connect with us

விமான நிலையத்தில் பெண் அதிகாரி செய்த செயல்… ஆடிப்போன ஏர்போர்ட்…!

Latest News

விமான நிலையத்தில் பெண் அதிகாரி செய்த செயல்… ஆடிப்போன ஏர்போர்ட்…!

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இதில் விமான நிலைய ஆணையத்தில் தொலைபேசி இணைப்பாக கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் தான் நிர்மலா.

இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்று இரவு பணிக்கு வந்திருக்கின்றார். இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அங்குள்ள காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top