---Advertisement---

மேகதாது அணை வந்தா தமிழ்நாட்டுக்கு தான் அதிக பயன்… டி.கே சிவகுமார் கருத்து..!

By Sri
Published on: September 3, 2024
---Advertisement---

மேகதாது அணை வந்தால் தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருக்கின்றார்.

பருவ மழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த முறை சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது என்று கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்திருக்கின்றார். மேலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டம் வந்தால் தமிழகம் ஆதாயம் அடையும் என்று கூறி இருக்கின்றார்.

தமிழகத்திற்கு வந்திருக்கும் டி கே சிவகுமார் சென்னை சேத்துப்பட்டியில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். பின்னர் அதன் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி கே சிவகுமார் “மேகதாது அணை தமிழ்நாடு அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகம்தான் பயன்பெறும்.

தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார். சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக ஈர்த்து இருக்கின்றது. இதற்காக நான் அரசாங்கத்திற்கும், ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தேன். அவர்களின் வித்தியாசமான அணுகுமுறையை வரவேற்கிறேன். இந்த வருகை எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல் செயல்முறையாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?