Latest News
மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என எதுவும் இல்ல… ஹேமா கமிட்டி குறித்து நடிகர் மம்முட்டி கருத்து…!
மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என்று எதுவும் இல்லை என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து முதன்முறையாக மம்முட்டி பேசியிருக்கின்றார்.
கேரளா திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இது மிகப்பெரிய பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இது மலையாள சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவலபாபு, சுதீஷ், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீது பல புகார்கள் வந்துள்ளது. நடிகர் மோகன்லால் அம்மா சங்கத்தை கலைத்து தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திரையுலகத்தை சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார். தனது பேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது என அனைத்தும் திரைத் துறையிலும் உள்ளது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தின் முன் உள்ளது.
இது குறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்கு பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகாரம் மையம் என்று எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதில் அளிக்கட்டும் என்று தான் காத்திருந்தேன். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும் தீர்வுகளையும் நான் முழு மனதோடு வரவேற்கின்றேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்ப்போடு கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.