ஓடிடி தளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய மற்றும் வித்தியாசமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. “உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக்காக இயக்கப்படுகிறது” (Inspired by true events. Driven by justice) என்ற சக்திவாய்ந்த மையக்கருத்துடன் உருவாகியுள்ள ‘உயிர்’ (Uyir) திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
சினிமா திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘உயிர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும் த்ரில்லர் மற்றும் உண்மைச் சம்பவங்களின் கலவையாக உருவாகியுள்ள இத்திரைப்படம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளியாகிறது. பன்மொழி வெளியீடாக வருவதால் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த அதிரடித் திரைப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













