Latest News

அய்யயோ அந்த ஆசை எல்லாம் கிடையாது… நான் வேற மாதிரி ஆளு…பகீர்னு சொன்ன இயக்குனர் பவித்ரன்!…

Published

on

பவித்ரன் “வசந்த கால பறவைகள்”படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  வில்லனாக நடித்து வந்த சரத்குமாரை கதாநாயகனாக்கி, ஒரு மாறுபட்ட கிளைமாக்ஸ் கட்சியால் படம் பார்த்த ரசிகர்களை பதைபதைக்க வைத்தார்.

இப்படி ஒரு ரிஸ்க் தேவையா? இந்த கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளப்படுமா? என அவருடன் இருந்த பலரும் கேட்க, இதுதான் சரி, இப்படித்தான் எனது படம் இருக்கு வேண்டும்  சொல்லி பிடிவாதம் பிடித்தாராம்.

ஆனால் இந்த கிளைமாக்ஸே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாம். தனது இந்த செயலுக்கு பெரிதும் உதவியாக இருந்தது மறைந்த தயாரிப்பாளர் ஜீ.வீ.யாம். அவர் மீது தனிப்பட்ட மதிப்போடு இருப்பவர் பவித்ரன்.

இயக்குனர் பீட்டர் செல்வக்குமாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார் பவித்ரன். “தாயம் ஒன்னு” படத்தில் அர்ஜுன் கதாநாயகன். தனது உதவியாளர் கல்யாணகுமார் மூலம் பவித்ரனை படப்பிடிப்பு வேலைகளை கவணிக்க சொன்னாராம் இயக்குனர்.

இந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டாராம் பவித்ரன். அவரைஅழைத்து பணிபுரிய வாய்ப்புக் கொடுத்தாராம் இயக்குனர்.

சினிமாவில் சாதிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு கிடையாது. தனக்கு பிடித்தது போல மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே  ஆசை என்பாராம் இவர்.

sooriyan

எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் “இது எங்கள் நீதி” படத்திலும் பணியாற்றி இருக்கிறார். தான் சற்று கிண்டல் பேர்வழி என்பதால்  “சூரியன்” படத்தை தன்னால் எளிதாக எடுக்க முடிந்ததாம்.

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’என சொல்லும் கவுண்டமணி கதாபத்திரம் போல தான் இவரின் இயற்கை குணமாம். “திருமூர்த்தி”, “இந்து” போன்ற வெற்றி படங்களை இயக்கிய பவித்ரன் இந்த தகவல்களை தனது பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.

Trending

Exit mobile version