Connect with us

டச் பண்ணி…டச் பண்ணியே…மனச டச் பண்ணியவங்க  இவங்கெல்லாம்!…வாவ் வாட் ஏ டச்?..

mayilsaamy

cinema news

டச் பண்ணி…டச் பண்ணியே…மனச டச் பண்ணியவங்க  இவங்கெல்லாம்!…வாவ் வாட் ஏ டச்?..

சினிமாவில் எந்த பிரிவிலாவது நட்சத்திரமாக ஜொலிப்பது என்பது அவ்வளவு சாதரணமான விஷயம் கிடையாது என்பது அந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே நன்றாக தெரியும். ஆனால் அந்த இடத்திற்கு வரும் முன்னர் அவர்கள் அதே சினிமாவில் பொறுமையோடு தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருந்து, அதற்காக அங்கே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து பின்னர் உச்சத்தொட்டவர்களாக மாறியிருந்தனர்.

தனது வித்தியாசமான உடல் மொழியாலும், நகைச்சுவையாலும் தனக்கென பெரிய ஒரு இடத்தை பிடித்திருந்த நடிகர் சின்னி ஜெயந்த் துவக்கத்தில் டச்-அப் ஆகவே வேலை செய்திருக்கிறார். பின்னர் அவரது விடாமுயற்சியால் தொடர் வெற்றிகளை பெற்றார்.

manobala

manobala

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்க்காவலன் என்ற பிரம்மாண்ட வெற்றியை தேடிக்கொடுத்த மறைந்த மனோபாலாவும் தனது சினிமா வாழ்வின் ஆரம்ப காலத்தில் டச்-அப் மேனாக பணிசெய்துள்ளாராம்.உதவி இயக்குனர், இயக்குனர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என தனக்குள்ளே பல்வேறு முகங்ககளை கொண்டிருந்த ரமேஷ் கண்ணாவும் டச்-அப் மேனாக மட்டுமல்லாமல் சினிமா துறையில் உயர தனக்கு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார்.

“மைனா”படத்தின் மூலம் பிரபலமடைந்து “கும்கி”,  “சாட்டை” போன்ற படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த தம்பி ராமையா துவக்கத்தில் டச்-அப் மேன் வேலையையும் செய்துள்ளார்.

பல குரல் மன்னன், சிறந்த நகைச்சுவை நடிகர் என வாழ்ந்து மறைந்த மயில்சாமியும் ஆரம்பத்தில் இவர்களைப்போலவே டச்-அப் மேனாகவே இருந்திருக்கிறார். இயக்குனர் பாக்யராஜிடம் மிமிக்ரி செய்து காட்டி தாவனி கணவுகள் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று பின்னர் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் உயர பறந்தார்.

 

More in cinema news

To Top