cinema news
அபயம் கேட்டு வந்தவருக்கு ஆபத்பாந்தவந்தவனாக மாறிய கூல் சுரேஷ்!… அடிச்சது பாருங்க லக்கி பிரைஸ்..
சிம்புவின் வெறித்தனமான ரசிகரும், டி.ராஜேந்தரின் சிஷ்யனுமானவர் ‘கூல்’சுரேஷ். இப்பொழுதெல்லாம் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று செய்து விட, அது பேசும் பொருளாக மாறி வருகிறது. பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு திடீரென மலர் மாலையை அணிவித்தார். அந்த பெண் கோபத்தில் கொந்தளிக்க, அங்கிருந்தவர்கள் முகம் சுழிக்கும் வண்ணமே இவர் நடந்திருந்தார். மன்சூர் அலிகான் தலையிட்டு மண்னிப்பு கேட்க சொல்லிய பிறகே தான் மேடையில் அமைதி திரும்பியது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவாக இருக்கட்டும், ட்ரையலர் வெளியீடு என பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டு இவர் மட்டும் கூலாக இருப்பார். அங்கிருப்பவர்கள் எல்லாம் கடுப்பின் உச்சியில் இருப்பர்கள். இது தொடர்கதையாகித்தான் வருகிறது.
அவர் பங்கேற்கும் பட நிகழ்ச்சிகளில் ப்ரமோக்காகவே வேண்டும் என்றே தான் அவர் இப்படி எல்லாம் நடக்கிறார் என நெட்டிசன்கள் அவரை கலாய்த்துகின்றனர். மனைவியை இழந்து தவிக்கும் கலீல் என்பவர் தனது வாழ்க்கையில் சந்த்தித்த துயரங்களை பற்றி ‘கூல்’சுரேஷிடம் சொல்லி இருக்கிறார். அதோடு வறுமையில் மிகுந்த கஷ்டப்படுவதாகவும் ஏதாவது செய்யுங்கள் என சுரேஷிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
திடீரென ஒரு ஆட்டோவை கலீல்|ற்கு பரிசளித்து அசத்தி இருக்கிறார் சுரேஷ். அதோடு மட்டுமல்லாமல் அவர் பரிசாக கொடுத்த ஆட்டோவில் கலீலை உட்கார வைத்து ‘கூல்’ சுரேஷே ஆட்டோவை ஓட்டியதோடு ‘கூல்’ சுரேஷ் நற்பனி மன்றம் சார்பாக இந்த உதவியை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.