- Homepage
- cinema news
- என்னது இதெல்லாம் சுசித்ராவாலத்தான் நடந்ததா?…இப்படிப்பட்ட ஆளாமே அவங்க?…
என்னது இதெல்லாம் சுசித்ராவாலத்தான் நடந்ததா?…இப்படிப்பட்ட ஆளாமே அவங்க?…
இன்றைக்கு வலைதளத்தில் கோடம்பாக்கம் பற்றிய செய்திகளை பார்க்க நினைத்தால், சுசித்ரா என்ற ஒரு பெயரை தவிர்க்கவே முடியாது. இப்படி காண்ட்ரவர்ஸிகளை தொடர்ச்சியாக கிளப்பிவருவதாக பார்க்கப்படும் சுசித்ரா செம்ம மாஸ் ஹிட் கொடுத்த பாடல்களை பாடியிடுக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார். சுசித்ரா என்ற பெயரிலியே நடித்தும் இருக்கிறார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் “லேசா லேசா” படத்தில் பாட வாய்ப்பு பெற்ற இவர். “ஜே.ஜே.” படத்தில் பாடிய ‘மே மாதம் தொன்னித்தெட்டில்’ பாடலின் மூலம் ரொம்ப பாப்புலர் ஆனார். அதே போல “காக்க காக்க” படத்தின் ‘உயிரின் உயிரே’, “யாரடி நீ மோகினி” படத்தில் ‘நெஞ்சை கசக்கி விட்டு போறவளே’, ‘பாலக்காட்டு பக்கத்திலே’ ரீ-மிக்ஸ் பாடல்களை பாடியது இவரே தான்.
விஜயின் “வேட்டைக்காரன்” படத்தில் ‘ஒரு சின்னத்தாமரை’, “மன்மதன்”, ‘என் ஆசை மைதிலியே’, “போக்கிரி” படத்தில் ‘டோலு டோலு தான் அடிக்கிறான்’, ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’ பாடல்களும் இவரின் குரல் வண்ணமே. பாரதிராஜா இயக்கிய “ஆயுத எழுத்து” படத்தில் சுசித்ரா என்ற தனது உண்மையான பெயரிலேயே நடித்துமிருக்கிறார்.
படத்தில் நடித்தும், பாடல் பாடியதோடு மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டஆகவும் வேலை பார்த்திருக்கிறார். “கே.டி.” படத்தில் தமன்னாவிற்கு டப்பிங் பேசியது இவரே. “திருட்டு பயலே”படத்தில் மாளவிகாவின் குரலாக ஒலித்தது இவரின் உச்சரிப்புகளே. கந்தாசாமி படத்தில் விக்ரமை டார்கெட் செய்து நடித்து வித விதமாக வசனங்களை திரையில் வாயசைத்திருப்பார். அதன் பின்னனியாக ஒலித்தது சுசியின் குரலே. அஜீத்தின் மெஹா ஹிட் ஆன “மங்காத்தா” படத்தில் லட்சுமி ராய்க்கு டப்பிங் பேசியதும் இவரே .
சுசித்ராவை தற்போது வேறு விதமாகவே பார்த்து வருபவர்களுக்கு இவரின் இன்னொரு முகம் இது என்பதை அவரின் திரை பயணம் சொல்லிவிடும்,