cinema news
கவுண்டமணியை கழட்டி விட பிளான் போட்ட சுந்தர் சி?… சைலென்டா வந்து வைலன்டா பேரு வாங்கிட்டாரே!
“அரண்மனை-4” நேற்று ரிலீஸாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கோடை வெப்பத்தை தணிக்க எங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நேரம் பார்த்து வெளியானது “அரண்மனை-4”. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் சென்று திரையரங்குகளை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் படத்தினுடைய இயக்குனர் சுந்தர்.சி தனது படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தை வழங்கியிருப்பார். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற திரைப்படங்கள் இவரின் பெயரை சொல்ல வைத்தது. ரஜினிகாந்த்தை வைத்து “அருணாச்சலம்”, கமலுடன் “அன்பே சிவம்” என தமிழ் சினிமவின் முன்னனிகளை வைத்து தடமும் பதித்திருந்தார்
சுந்தர்.சி “மேட்டுக்குடி” படத்தின் போது நடந்த ஒரு ருசீகர சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் கவுண்டமணியே நடிக்க வைக்க சுந்தர்.சிக்கு விருப்பம் இல்லையாம். அவர் அதிக சம்பளம் என தயாரிப்பாளரிடம் சொல்லி ஒதுக்க நினைத்திருந்திருக்கிறார்.
எப்படியோ தயாரிப்பாளரை ‘தாஜா’ பண்ணிவிட்ட கவுண்டமணி திடீரென சுந்தரி.சிக்கு அழைப்பு வந்ததாம் தயாரிப்பாளர்களிடமிருந்து, இந்த படத்தில் கவுண்டமணி நடிக்கிறார், அவருக்கு என ஒரு கதாபாத்திரத்தை தயாராக வைக்க சொல்லி.
அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாம் கவுண்டமணி நடித்த ‘காளிங்கன்’ கேரக்டர். தனது அக்கா மகளான நக்மாவை சுற்றி சுற்றி அலைந்து காதலிப்பதாக நடித்திருப்பார். எப்பொழுதும் போல கதாநாயகனுக்கே கதாநாயகி .
ஆனால் கார்த்திக்குடன் சேர்ந்து அவர் அடித்த லூட்டி மிகவும் ரசிக்கப்பட்டது. ஜெமினி கனேசனும் இவருடன் காமெடியில் களமிறங்கி கலக்கியிருப்பார். “மேட்டுக்குடி”யில் கார்த்திக்கு இணையாக வைக்கப்பட்ட ‘வெல்வெட்டா – வெல்வெட்டா’ பாடல் ரசிகர்களை கவர்ந்து கைதட்டல்களை பெற்று தந்தது.